Tuesday, January 12, 2016

கடந்த மூன்று ஆண்டுகளில் எங்கள் அறக் கட்டளை மூலமாக சென்று MBBS படிக்கிறவர்கள்


+2 - இல் 200 க்கு 200 பெறுவது சாத்தியமா ????



நமது பிள்ளை 200 க்கு 200 வாங்கி, மருத்துவராக வேண்டுமென்றோ அல்லது விரும்பும் அரசு கல்லூரியில் இடம் பெற வேண்டும் என்றோ, இன்று வேண்டாத பெற்றோர்கள் இல்லை. அதற்காக அவர்கள் பிள்ளைகளை படுத்தும் பாடோ கொஞ்ச நஞ்சமல்ல. பள்ளி, டியுஷன் என மாணவ மாணவிகள் தினமும் பந்தாடப்படுவதையும் பார்க்கின்றோம்.
உண்மையில் எல்லா பிள்ளைகளும் 200 க்கு 200 வாங்க முடியுமா? வாங்க முடியும் என்பதை வலியுறுத்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.
நமது +2 பாடத்திட்டம் 2006 – இல் இருந்து இன்று வரை ஒன்றே. ஒவ்வொரு வருடமும் மூன்று தேர்வுகள் நடக்கின்றது. ஆக இதுவரை 27 தேர்வுகள் நடந்துள்ளது. இந்த வினாத்தாள்களை ஆராய்ந்ததில் பின் வருவன விளங்குகிறது. 
·         3, 5 மற்றும் 10 மதிப்பெண்கள்  கொண்ட விளக்க வினாக்கள் (Descriptive Type) கேட்டவையே பெரும்பாலும் ( 95 % க்கு மேல் ) கேட்கப்படுகிறது.
·         1 மதிப்பெண் கொண்ட வினாக்கள் (Objective type) 50 % வரை  கேட்டவையே கேட்கப்படுகிறது. அதாவது 30 க்கு 15 வினாக்கள் வரை பழையவற்றிலேருந்தே கேட்கப்படுகிறது.  இது இயற்பியல், வேதியல் – க்கு மட்டுமே பொருந்தும். உயிரியலில் 33% வரை (அதாவது 30 க்கு 10 வினாக்கள்) மட்டுமே திரும்ப கேட்கப்படுகிறது.
அப்படி என்றால் ஒரு மாணவன் பழைய வினாத்தாள்களை மட்டுமே முழுவதும் படிக்கிறான் என்றால் தோராயமாக எவ்வளவு மதிப்பெண்கள்  பெற முடியும்?
·         சிறு, குறு மற்றும் பெரு வினாக்கள் மூலம் 170 மதிப்பெண்கள்  எளிதில் பெற முடியும்.
·         ஒரு மதிப்பெண் கொண்ட வினாக்கள் மூலம் 30 க்கு 15 மதிப்பெண்கள்  வரை பெற முடியும்.
ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது? 200 க்கு 185 மதிப்பெண்கள்  எடுப்பது என்பது மிக மிக சுலபம். மீதியுள்ள 15 மதிப்பெண்கள்  அதாவது 185 - லிருந்து 200 க்கு தான் போட்டியே.
அந்த 15 மதிப்பெண்களை பெறுவது எப்படி என்பதை ஒருவன் புரிந்து கொண்டால் போதும், 200 க்கு 200 என்பது மிக எளிது. அதற்கு பின் வருவனவற்றை செய்யவும்.
·         அந்த 15 மதிப்பெண்களும் பாடத்தின் உள்ளே இருந்து தான் கேட்கபடுவதால், பாடத்தை வரி விடாமல் படிக்க வேண்டும்.
·         அதிலும் முக்கியமாக, பாடத்தை புரிந்து படிக்க வேண்டும்.

இப்படி படித்தால் போதுமா? 200 க்கு 200 வாங்கி விடலாமா? முழுப் பாடத்தையும் தேர்வு வரை நினைவில் நிறுத்துவது என்பது எளிதா? என்றால் பெரும்பாலோனோருக்கு சற்று கடினம் என்பது தான் உண்மை. 
இதைக் கருத்தில் கொண்டு பாடங்களை நினைவில் கொள்ள www.winmyson.com என்ற இணைய சேவையை கடந்த இரண்டு ஆண்டுகளாக 10 மற்றும் +2 மாணவர்களுக்காக நடத்தி வருகிறோம். 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த இணைய சேவையை முழுவதும் இலவசமாக அளிக்கிறோம்.
இதன் சிறப்பு அம்சங்கள் என்னவெனில் ...
·         ஒவ்வொரு பாடத்தையும் அலசி ஆராய்ந்து தலைப்பு / பாட  வாரியாக 1 மதிப்பெண் கொண்ட வினாக்களின் தேர்வுகள்  கொடுக்கப்பட்டுள்ளது.
·         இந்த தேர்வை எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.
·         ஒரு வினாவின் விடை, உதரணமாக C எனில், அடுத்த முறை இதே வினாவின் விடை a, b (அல்) d என வரும். ஆக ஒவ்வொரு  முறையும் அனைத்து விடைகளையும் படித்து பார்த்தே தேர்வு செய்ய வேண்டும். 
·         இப்படி தலைப்பு வாரியான தேர்வுகளை மீண்டும் மீண்டும் செய்யும் போது, அவர்களை அறியாமலேயே, பாடம் முழுவதும் வினா – விடைகளாக மனதில் பதிந்து விடுகிறது.
·         பெற்றோர்களுக்கு இயற்பியல், வேதியல் மற்றும் உயிரியல்  பாடங்களை படித்தோ அல்லது தெரிந்தோ இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், தங்களது பிள்ளைகள் எந்த தலைப்பில் மதிப்பெண்கள்  குறைவாய் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.
யாருமே பெரிய பாறை தடுக்கி விழுவதில்லை. சிறிய கல் தடுக்கி தான் விழுவோம் என்பதைப் போல ஒரு மதிப்பெண் வினாக்களில் கூடுதல் கவனம் செலுத்தி +2 – வில் 200 க்கு 200 பெற வாழ்த்துகிறேன்.